தமிழ்த்தேசியத் தந்தை பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்களின் வாழ்வின் அறம

”எப்படியேனும் இத் தமிழகத்தை
முப்படி உயர்த்திடல் வேண்டும்- என்
மூச்சதற் குதவிடல் வேண்டும்!”
‘இது பா எழுதும் சராசரி புலவன்
எழுதிய வரிகள் அல்ல .
பாவலரேறு பெருஞ்சித்திரனார் எனும்
விடுதலைப் போராளியின் தமிழ்த்தேச
வேட்கையின் உயிர்த் துடிப்பு .
புலவனுக்கும் போராளிக்கும்
வேறுபாடுண்டு. புலவன்
எழுதுவான், போராளி வாழ்வான்.
தமிழகம் இதுவரை கண்டிராத
புலவர்களிலிருந்து தமிழறிஞர்கள்
என்ற வரையறுப்புகளிலி
ருந்து பாவலரேறு வேறுபட்டவர்.
இவருக்கு புலவர் அல்லது தமிழரின்
அடையாளம் போதுமானதல்ல. தமிழ்த்
தேசத்தின் விடுதலைப்
போராளி என்ற
அடையாளமே இவருக்கு பொருந்தக்
கூடியது. அதுமட்டுமல்லாமல்
தமிழ்த்தேசியத்தின் இயற்கையான
தேசிய எழுச்சியின் வளர்ச்சியில்
விளைந்தவர். தமிழ்த்தேசியத்தின்
நேரடி தேசிய அடையாளம்.
.தமிழ்நாடு விடுதலைக் கருத்தின்
தொடக்க ஆண்டு 1938 ஆக
இருந்தாலும், அது தமிழ்த்தேச
விடுதலைத் தேவைக்குரிய
அரசியலைத் தன்
தொடக்கத்திலேயே முன்மொழிந்திடவி
ல்லை
மொழி இனம் உரிமைகள்
மீட்டெடுக்கப்பட வேண்டும் என்றால்,
தமிழ்நாடு விடுதலைதான்
தீர்வு என்று எந்த வகையான
சமரசமுமின்றி முன் வைத்தவர்.
அதற்காகப் போராடியவர்
பாவலரேறு அவர்கள்.
தமிழ்நாட்டு விடுதலைக்காகப்
போராடக் கூடிய
தனி அமைப்பு கட்டும் முயற்சியிலும்
ஈடுபட்டவர். கடந்த காலங் களில் தமிழ்
மொழி இன உரிமைப் பேசியவர்கள்
யாரும் தமிழ்நாட்டு விடுதலையைப்
பற்றி யாரும் வெளிப்படையாக
வரயைறுத்து முன்வைக்கவில்லை.
அதற்காகப் போராடவில்லை.
இன்னும் சொல்லப் போனால்
பெரியார் அவர்கள் முன்வைத்த
“தமிழ்நாடு தமிழருக்கே!’ என்ற
முழக்கம் கூட
தமிழ்நாடு விடுதலைக்கான தெளிந்த
முழக்கமாக இல்லை. .
தமிழ்நாடு விடுதலைக்கான
வளர்ச்சியை நோக்கி வழிகாட்டவும்
இல்லை துணியவும் இல்லை;
வெற்று முழக்கமாகவே இருந்தது.
திராவிட வழித்தோன்றல்
அரசியலோ ஒரு காலை இந்தியத்திலும்
மறுகாலை தமிழகத்திலுமாக வைத்துத்
தன் பயணத்தைத்
தொடர்ந்தது பின்னர் மொழியால்
தமிழன், இனத்தால் திராவிடன்,
நாட்டால் இந்தியன் எனத்
தமிழர்களை இந்தியப் புதைச் சேற்றில்
அமிழ்த்தியது.
திராவிடங்களிலிருந்து திமிறிய
சிலரும் பின்னர்
இந்தியத்தோடு கரைந்து போயினர்.
தமிழக
வராற்றிலேயே தமிழ்நாடு விடுதலைய
மூன்று மாநாட்டை நடத்தியவர்
பாவலரேறுவே.
அம்மாநாடுகளை நடத்துவதில்
பாவலரேறு எதிர்கொண்ட
நெருக்கடிகள் கடுமையானவை
தோழர் தமிழரசன் புலவர் கலிய
பெருமாள் போன்ற தமிழ்த்தேசிய
போராளிகள்
தமிழ்நாடு விடுதலை அரசியலை முன்
முன்பாகவே அய்யா பாவலரேறு அவர்
ஒருவர்தான்
தமிழ்நாடு விடுதலையைப்
பற்றி தமிழ்த் தேசத்தின் எதார்த்தச்
சூழலிலிருந்து முன் வைத்தவர்.
அதுவும் எதிரியை மிகத் தெளிவாக
வரையறுத்து நமது மொழி இந்தி ஆதி
்து விடுபட வேண்டுமென்றால்,
நமது இனம் தன் மானத்துடன் வாழ
வேண்டும் என்றால், தமிழ்த்தேசத்தின்
அரசியல், பொருளாதாரம்,
பண்பாடு மீட்டெடுக்கப்பட
வேண்டு மென்றால், நாம் இந்தியாவின்
ஆதிக்கத்திலிருந்து விடுதலைப் பெற
வேண்டும். தமிழ்நாடு இந்தியப்
பேராதிக்கத்திலிருந்து முழுமையாக
விடுதலைப் பெற வேண்டும்.
இந்தியாதான் நமது முதல் எதிரி.
அதேபோல் இந்தியாவின் அதிகார
வகுப்பு கிருத ஆரியம்
தூக்கி தமிழியம் வீழ்த்தி அழிக்கும்
பார்ப்பனர் பனியா இந்தியத்
தரகர்களை உள்ளிட்டப் பார்ப்பனிய
வகுப்பினர் என்பதிலும் தெளிவாக
இருந்தவர். தமிழ்த் தேசிய
மக்களை இந்தியன் என்ற பெயரால்
இந்தியச் சிறைக்குள் அடக்க
முயற்சிப்பது எவ்வளவு பெரிய
மோசடியோ அதே அளவு மோசடியா
“திராவிடத்திற்குள்” அடக்க
முயற்சிப்பதும்
என்பதை தெளிவுறுத்தியவர்.
அவர் கொண்ட கொள்கையில்
கொஞ்சமும் பின் வாங்காமல்
அரசு அடக்கு முறைகளுக்கு அடிபண
எதற்கும் அஞ்சாத ஒரு உண்மையான,
நேர்மையான தேசியப் போராளி.
”வாட்டுகின்ற வறுமைக்கும் என்
தமிழர் அடிமையில் வாடுதற்கும்
நீட்டுகின்ற வெடிகுழல்தான்
தமிழகத்தில்
ஒரு முடிவை நிகழ்த்துமென்றால்
காட்டுங்கள் தமிழ்மறத்தை
கட்டறுக்கும் காளையரே தீட்டுங்கள்
நும் பெயரை முதல்பெயராய்
பட்டயத்தில்!
என்று கருவி ஏந்திய விடுதலைப்
போராட்டத்திற்கு அறைகூவல்
விடுத்தார்.
சாதி அழுக்கு, மத அழுக்கு,
பொருள் ஆளுமை அழுக்கு,
அறிவாளுமை அழுக்கு,
வினை ஆளுமை அழுக்கு இப்படிப்பட்
குமுக அழுக்குகளால் விழைகிற
உணர்ச்சிகளுக்கு மாந்தன் ஆட்படாமல்
தனிநிலையில் தப்பித்து விட
இயலாது.
இப்படிப்பட்ட அழுக்குகளை ஒருவர்
எப்படி எதிர்கொள்கிறார்
என்பதிலேயே ஒருவரின்
வாழ்க்கை பொருளுடைய தாகின்றது.
அந்தப் பொருளுடைய
வாழ்க்கை குமுக
உறவுகளோடு உறவு கொண்டு கு
அழுக்குகளை நெருட்டுகிற சூழலில்
பொருளுடைய அவரின்
வாழ்க்கை வரலாற்றுக் குரியதாக
மாறுகிறது.
அப்படிப்பட்டவர்களே வரலாற்றுக்
குரியவர்களாக
வரலாற்று மாந்தர்களாக நிற்க
இயலும்.
குமுக அழுக்குகளை அக, புற
நிலைகளில் நீக்குவதற்கான
நிகழ்ச்சிகள் என்பவை ஆழ்ந்த
பொருளுடையவை.
அதுவும், இத் தமிழ்ப் பேரினக்
குமுகத்தின் மீது படிந்திருக்கிற
கறை சொல்லி மாளாதவை.
எவர் எவர்க்கெல்லாம், எவ்
எவற்றுக்கெல்லாம் இத் தமிழகம்
அடிமைபட்டுக்
கிடக்கின்றதோ அவற்றின்
அழுக்குகளெல்லாம் இப்
பேரினத்தை முடை நாற்றத்திற்
குட்படுத்தி வைத்திருக்கிறது.
சாதிப் புழுக்கள் நெளிந்திடும் சாணித்
திரளைகள் நாம் என்றும், இந்து மதம்
எனும் இழி மதம் ஒழிக என்று நம்
இழிநிலைகளைச்
சாடியதோடு ஆரியத்தின்
ஆதிக்கத்தை எதிர்த்தும் ஆங்கிலத்தின்
வன் திணிப்பைக் கண்டித்தும்
தமிழ்த்தேசியத்தை அழிக்கும் இம்
மண்ணின் இழி அழுக்குகளைத் தம் தீ
எழுத்துக்களாலும் செயலாலும்
பொசுக்க எழுந்த
வரலாறே பாவலரேறு பெருஞ்சித்திரனா
ரின் அவர்களின் வரலாறு.
பாவலரேறு அவர்களின்
வரலாறு எழுத்தின் வடிவமாக
நின்று விடாமல் . செயலின்
வீச்சாகவும் எழுந்தது
அவரின் எழுத்தும் செயலும்
மாறுபாடுடையதன்று
தூய தமிழ் முயற்சிகள்
எழுத்தளவிலும்,
மொழி அளவிலோடும்
நின்றிருந்ததை, செயலியக்கம் வழியும்,
மொழி நிலை தாண்டி இன
நாட்டு நலம் நோக்கியும்
செயற்படுத்தியது தென்மொழியே.
தென்மொழியின் பணி இதழ்ப்
பணியாக மட்டும் நில்லாமல் இயக்கப்
பணியாகவும் விரிந்திருந்தது.
தூய தமிழியக்கத்திற்குத்
தென்மொழியின்
பணியே பேரியக்கமாய்,
பெரு மக்களிக்கயமாய் நடந்தது.
தென்மொழியின் ஆசிரியராகவும்,
தூய தமிழியக்கத்தின் முதற்
படைஞராகவும் நின்று போரிட்டவர்
பாவலரேறு பெருஞ்சித்திரனார்
அவர்களே.
இப்பெரும் வரலாற்று நாயகரை நாம்
முறையாகவும், சரியாகவும் கற்க
வேண்டியிருக்கிறது. தமிழகம்
ஒரு முழுமை பெற்ற தேசிய இனமாக
வளர்ச்சி அடைந்ததற்கான அடையாளம்
பாவலரேறு. ஆம். தமிழ்த்தேச
விடுதலையை சொல்லித் தந்த தமிழ்த்
தேசத் தந்தையை கற்போம். தமிழ்த்
தேச
விடுதலையை முன்னெடுப்போம்.
தமிழகமும் தமிழீழமும் முற்றுமாய்
விடுதலை அடைய வேண்டுமெனில்
நாம் இனியும் சொரணையற்ற
மக்களாய் வெறும் சோற்றுப்
பிண்டங்களாய் வாழக்கூடாது.
”உரிமையை மீறிய ஒரு வளம் இல்லை”
எனும் ஐயா பாவலரேறுவின்
அறைகூவலை தமிழ்த்தேசிய
மக்களாகிய நாம் என்றென்றும்
நெஞ்சிலேந்தி சூளுரைப்போம்!
பாவலரேறு ஐயா அவர்களின்
வாழ்வின் அறம் , தமிழ்த்தேச
எழுச்சியின் மறம்.
தமிழ்த்தேசியத்
தந்தை பாவலரேறு அவர்களின்
தமிழ்த்தேசிய வாழ்வின்
சிறு குறிப்புகள்
பாவலரேறு அவர்கள் சேலம்
மாவட்டத்தைச் சேர்ந்த சமுத்திரம்
என்ற சிற்றூரில் 1933 ஆம்
ஆண்டு மார்ச்சு மாதம் 10 ஆம்
நாளன்று பிறந்தார். இவரின்
பெற்றோர் துரைசாமி -குஞ்சம்மாள்
தம்பதியினர். இவருடைய இயற்பெயர்
இராசமாணிக்கம். ஆனால் இவர்
தம்முடைய தந்தையார்
பெயரை இணைத்துத் துரை.மாணிக்கம்
என்று தன்பெயரை மாற்றி அமைத்துக்
கொண்டார்.
பள்ளிப் பருவத்தில் 8ஆம்
வகுப்பு படித்துக் கொண்டிருக்கும்
போது ”தூவல் (பேனா) வன்மையா?
நா வன்மையா?”
என்று திருச்சி வானொலி நடத்திய
பட்டிமன்றத்தில்
”தூவலே வன்மையானது”
என்று பேசி பரிசு பெற்றார்.
”மல்லிகை” எனும் தனது முதல்
பாவியத்தை எழுதினார்.
தொடர்ந்து பூக்காரி எனும் பாவியம்
எழுதி பின்னாளில் ”கொய்யாக்கனி”
எனும் பெயரில் வெளியிட்டார்
குழந்தை என்னும் பெயரில்
கையெழுத்து இதழையும்
சிறிது காலம்
கழித்து அருணமணி என்னும்
புனைபெயரில் மலர்க்காடு என்ற
கையெழுத்து இதழையும் நடத்தினார்.
சேலம்
கோட்டை நகராட்சி உயர்நிலைப்
பள்ளியில் இவரின் தமிழாசிரியர்களாக
அமைந்தவர்களுள் குறிப்பிடத்
தக்கவர்கள் சேலம் நடேசனாரும்
தமிழ்மறவர் பொன்னம்பலனாரும்
ஆவர்.
1950 இல் பள்ளிப்படிப்பை முடித்த
துரை. மாணிக்கம் சேலம் அரசுக்
கல்லூரியில் தம் பட்டப்படிப்பைத்
தொடர்ந்தார். இவரின் ஆசானாக
மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர்
அமைந்து சிறந்தது இக்கல்லூரியில்த
ான் என்பது மிக முகாமையான
செய்தியாகும். கல்லூரியில் ஆசிரியர்
மாணவர் என்ற நிலையில் தொடங்கிய
இவர்களின்
உறவு கடைசிவரை தொடர்ந்தது.
கல்லூரிப்
படிப்பிற்கு இடையிலேயே சேலம்
ஆட்டையாம்பட்டி சின்னசாமி –
செல்லம்மாள் இணையரின்
புதல்வி கமலம் என்கிற
தாமரையம்மையாரைக்
காதலித்து மணம் புரிந்துகொண்டார்.
திருமண நாள் 25-4-1951.
1954 இல்
அஞ்சல்துறை உதவியாளராகப்
புதுவையில் பணியமர்த்தம்
கிடைத்தது.
பாவேந்தரோடு பழகக்கூடிய
வாய்ப்பை எண்ணி மிக
மகிழ்வோடு புதுவைப்
பணியை ஏற்றார் பாவலரேறு.
எதிர்பார்த்தது போல்
பாவேந்தருடனான நட்பு கிட்டியது.
பாவலரேறுவின் பாக்கள் பல
இதழ்களிலும் வெளிவந்தன. 1959 இல்
பாவலரேறு கடலூருக்கு இடமாற்றம்
செய்யப்பட்டார். பாவலரேறுவின்
அச்சிதழ் நடத்தும் நோக்கம்
நிறைவேறும் தக்கசூழல்
அமைந்தது கடலூரில்தான்.
பாவாணர் இக்காலத்தில்
அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில்
அகரமுதலிப் பணிப்
பொறுப்பேற்றிருந்தார். பாவாணரின்
வழிகாட்டுதலுடன் திங்கள் ஈரிதழாக
01-08-1959 இல்
கடலூரிலிருந்து பாவலரேறுவின்
தென்மொழி வெளிவரத்
தொடங்கியது. துரை.மாணிக்கம்
பெருஞ்சித்திரன் என்னும்
புனைபெயரில் பொறுப்பாசிரியராகத்
தென்மொழியில் இடம்பெற்றார்.
பதினாறு இதழ்கள் வெளிவந்த
நிலையில்
தொடர்ந்து இதழை நடத்தமுடியாமல்
பொருள் முட்டுப்பாடு காரணமாக
இதழ் நின்றுபோனது.
மூன்றாண்டுகளுக்குப் பிறகு 1963
பிப்ரவரி முதல் மீண்டும்
தென்மொழி புத்துயிர் பெற்றது.
இதழின் சிறப்பாசிரியராகப் பாவாணர்
இடம்பெற்றார். உறுப்பாசிரியர்களாக
ம.லெனின் தங்கப்பா, மு.சாத்தையா,
செம்பியன் ஆகியோர் குறிக்கப்
பெற்றனர். தென்மொழி முன்னிலும்
வீறுடன் மொழி, இன, நில
விடுதலைக்கான
சிந்தனைகளை ஆழமாகத் தமிழர்
நெஞ்சில் விதைக்கத் தொடங்கியது.
17.11.1965 ஆம்
ஆண்டு இந்தி எதிர்ப்புப் போரில்
அன்றைய முதல்அமைச்சர்
பக்தவச்சலத்தை கடுமையாகக்
கண்டித்து ஆசிரியவுரை எழுதினார்.
இப்போராட்ட முனைப்புகளில்
தென்மொழியின் பங்கு மிகக்
கணிசமானது இதற்காக
அரசு வழக்குப்
பதிவு செய்து இவருக்கு 200
உருபாய் தண்டம்
அல்லது நான்கு மாதம் கடுங்காவல்
சிறைத்தண்டனை என தீர்ப்பளித்தது.
இது எம் உரிமையின் குரல் அபராதம்
கட்டுவது தனக்கு இழுக்கு என
ஐயா தொகை கட்ட மறுத்ததால்
வேலூர் நடுவன் சிறையில்
அடைக்கப்பட்டார். இதனால் ஐயாவின்
அஞ்சல் துறைப்பணி பறிக்கப்பட்டது.
1966 இல் தென்மொழிக்கான சொந்த
அச்சுக்கூடம் நிறுவப்பெற்றது.
தமிழ்ச்சிட்டு எனும் சிறுவர் இதழ்
பெருஞ்சித்திரனாரால்
தொடங்கப்பெற்றது.
1968 இல் திருச்சியில் நடைபெற்ற
தனித்தமிழ்க் கழக மாநாட்டின்
போது உலகத் தமிழ்க் கழகம் என்ற
அமைப்பு தொடங்கப்பட்டது. இதன்
தலைவராக மொழிஞாயிறு பாவாணர்
அவர்களும் பொதுச் செயலராகப்
பெருஞ்சித்திரனார் அவர்களும்
தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
1966 ஆம் ஆண்டு தென்மொழியில்
”தமிழக விடுதலை இயக்கம்” விரைவில்
தொடங்கப்பெறும் என்ற
அறிவிப்பை வெளியிட்டார்.
1967 ஆம் ஆண்டு ”தமிழக
விடுதலைப் படை” விரைவில்
அமைக்கப் பெற இருப்பதாகவும்
அதில் உடனே உறுப்பனர் ஆகிக்
கொள்ளுங்கள் எனும்
அழைப்பை தென்மொழியில்
விடுத்தார்.
07.11.1969 ஆம் ஆண்டு தமிழக
விடுதலைப் படைக்கான அமைப்புக்
கூட்டம் திருக்கோயிலூரில்
நடத்தப்பெற்றது. 96
பேருக்கு அழைப்பு விடுக்கப்பெற்று
அதில் 34 பேர் வந்திருந்தனர்.
வந்தவர்கள் குருதிக்
கையொப்பமிட்டு தமிழக
விடுதலைக்கென
முன்னின்று செயல்படுவோம் என
உறுதியுற்றனர்.
10,11.06.1972 ஆம் ஆண்டு தமிழக
வரலாற்றிலேயே முதன்முறையாக
தமிழக விடுதலை மாநாடு திருச்சி –
தேவர் மன்றத்தில் ஐயா அவர்கள்
அமைப்பாளராக இருந்து நடத்தினார்.
மாநாட்டினையொட்டி மாபெரும்
பேரணி தமிழக விடுதலைக்கான
முழக்கங்களுடன் நடத்தப்பெற்றது.
09.06.1973ஆம் ஆண்டு தமிழக
விடுதலை இரண்டாம்
மாநாடு மதுரை இரீகல் திரையரங்கில்
ஐயா தலைமையில்
ஏற்பாடு செய்யப்பட்டது. முன்னதாக
கட்டமொம்மன்
சிலையிருந்துபேரணி புறப்பட்டபோ
துறையால் தளைப்படுத்தப் பட்டனர்.
13.07.1975 ஆண்டு தமிழக
விடுதலை மூன்றாம்
மாநாடு சென்னை கடற்கரையில்
ஐயா தலைமையில்
ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால்
முந்தைய நாளே ஐயா உள்ளிட்ட 22
பேர் சிறைப் படுத்தப்பட்டனர். 56
நாட்கள் கழித்து பிணையலில்
விடுதலை செய்யப்பட்டனர்.
05.02.1976 ஆம்
ஆண்டு இந்திராகாந்தியின்
உள்நாட்டு பாதுகாப்பு நடவடிக்கை (
கொடுஞ் சட்டத்தின் கீழ்
ஐயா சிறைபடுத்தப்பட்டார்.
19.05.1978 ஆம்
ஆண்டு இலங்கைக்குச் சென்று இன
விடுதலை குறித்து சொற்பொழிவு
27.08.1978ஆம் ஆண்டு தமிழீழ
விடுதலைப் போராளிகள்
தமிழகத்திற்கு முதன்முதலில் வந்த
பொழுதிலிருந்து அவர்களுக்கு ஐயா
இருந்து வெளிப்படையாக
ஆதரவு தந்தார்.
18.04.1981ஆம் ஆண்டு அந்தமான்
தீவுக்கு முதன்முறையாக கப்பலில்
சென்று பல்வேறு நிகழ்ச்சிகளில்
கலந்து கொண்டார்.
12.05.1981ஆம் ஆண்டு ”மனுநூல்
எரிப்புப் போராட்டத்தில்”
கலந்து கொண்டு தளைப்படுத்தப்பட
்டு 15 நாள் சிறையில்
அடைக்கப்பட்டார்.
7,8.11.1981ஆம் ஆண்டு ”உலகத்
தமிழின முன்னேற்றக் கழகம்”
தொடக்க மாநாடு சென்னை பெரியார்
திடலில் நடைபெற்றது. மாநாட்டில்
தமிழீழப் போராளிகளும்,
ஐயா அமிர்தலிங்கமும்
கலந்து கொண்டனர்.
தமிழக விடுதலை வேட்கையில்
ஆழ்ந்திருந்ததால் தான் அவரால் தமிழீழ
விடுதலைக்குத் நெருக்கடியான
நேரங்களில், யாரும் பேச அஞ்சிய
போதுகூட, ஆழ்ந்து இயங்க
முடிந்தது.
தமிழீழ விடுதலைக்குக் கருத்தளவில்
மட்டு மல்லாது, தமிழகம்
நோக்கி வந்த போராளியர்க்கு 70
களின் பிற்பகுதி முதலே புகலிடமாகத்
தென் மொழியை அமைத்துக்
கொடுத்த வகையில் தமிழீழ
விடுதலைக்குத் துணையாக நின்றார்.
06.08.1982ஆம் ஆண்டு விடுதலைப்
புலிகளின் தலைவர் திரு. பிரபாகரன்,
திரு. உமா மகேசுவரன் உள்ளிட்ட
ஐவர் தமிழகத்தில் சிறையில்
அடைக்கப்பட்டு பிணையலில்
வெளிவந்தபோது பாவலரேறு தனது க
நேரில் சென்று வரவேற்றார்.
தென்மொழி அலுவலகத்திற்குள்
04.08.1983ஆம் ஆண்டு புலனாய்வுக்
காவல் துறையினர் புகுந்து தமிழீழம்
தொடர்பாக வெளியாகவிருந்த
தமிழ்நிலம் இதழ்களையும்
அச்சு எழுத்துக்களையும் பறிமுதல்
செய்ததோடு ஐயா மீதும் தோழர்
பொழிலன் மீதும் வழக்குப்
பதிவு செய்தனர்.
10.09.1983ஆம் ஆண்டு ஐரோப்பிய
கண்டத்திலுள்ள இலண்டன், பிரான்சு,
சுவிட்சர்லாந்து,செருமணி ஆகிய
நாடுகளுக்குப் பயணித்துப்
பல்வேறு நிகழ்ச்சிகளில்
கலந்துகொண்டார்.
1983 இல் தொடங்கிய தமிழீழ
விடுதலைப் போரின்போதும்
அதற்கு முன்பும் தமிழகம் வரும்
தமிழீழத் தலைவர்கள் பலரும்
பாவலரேறு அவர்களைச் சந்திப்பதும்
கலந்துரையாடுவதும் கருத்துரைகள்
பெறுவதும் வழக்கமாயிருந்தன.
விடுதலைப் புலிகள், தமிழீழப்
போரில் முனைப்புடன்
வினையாற்றிக் கொண்டிருந்த
காலங்களில்
பாவலரேறு ஐயா அவர்கள்
விடுதலைப் புலிகளை ஆதரித்துப்
பேசுவதும் எழுதுவதும் காலத்தின்
கடமை என்பதனை உணர்ந்து செயலாற்
கொண்டிருந்தார்கள்.
21.10.1984ஆம்
ஆண்டு மீன்சுருட்டியில்
சாதி ஒழிப்புக் கருத்தரங்கம்
நடைபெற்றது. அதில் ”சாதித்
தீமைகளும் அதை ஒழிக்கும் திட்டமும்”
எனும் தலைப்பில் ஐயா எழுதிய நூல்
வெளியிடப் பெற்றது.
அதே நிகழ்ச்சியில் தோழர் தமிழரசன்
அவர்கள் எழுதிய ”சாதி ஒழிப்பும்,
தேசிய இன விடுதலையும்” எனும்
நூலும் முன்வைக்கப் பெற்றது.
11.11.1984ஆம்
ஆண்டு ”ஒடுக்கப்படுவோர்
உரிமை மீட்பு கூட்டமைப்பு”
பாவலரேறு ஐயா அவர்களின்
தலைமையில் தொடங்கப்பெற்றது.
09.12.1984ஆம் ஆண்டு உலகத்
தமிழின முன்னேற்றக் கழகம், பெரியார்
சம உரிமைக் கழகம்,
அறிவியக்கப்பேரவை,
தமிழ்நாடு பொதுவுடைமைக் கட்சி,
இந்திய பொதுவுடைமைக்
கட்சி (மா.லெ.), நடுவண் சீரமைப்புக்
குழு – ஆகிய இயக்கங்கள்
இணைந்து ”தமிழக மக்கள் விடுதலைக்
கூட்டணி” எனும்
கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது.
அதன் அமைப்புக்
குழு பொறுபபாளராக ஐயா அவர்கள்
செயல்பட்டார்கள்.
27,28.12.1986ஆம் ஆண்டு தமிழின
எதிர்காலத் தீர்மான
மாநாட்டை ஒருங்கிணைத்து நடத்தினார்.
27.11.1990ஆம் ஆண்டு மாவீரர்
நாளுக்கென
சிறப்பு நிகழ்ச்சிக்கு பாவலரேறு ஐயா
நாளிலே மலர்க தமிழீழமே!” எனும்
பாடலை தென்மொழியில் எழுதினார்.
02.12.1990ஆம்
ஆண்டு ஐயா அவர்கள் தென்மொழி,
தமிழ்நிலம் இதழ்களில் எழுதிய
”தமிழீழம்” எனும் தொகுப்பு நூல்
வெளியிடப்பெற்றது.
தமிழ்த்தேச
தன்னுரிமை மாநாட்டை 20.04.1991ஆம்
ஆண்டு பழ.நெடுமாறன்
ஒருங்கிணைக்கையில்
மாநாடு தடை செய்யப்பட்டு பாவலரே
90 பேர் 7 நாள்
சிறை வைக்கப்பட்டனர்.
”தமிழீழ
விடுதலை ஏற்பிசைவு (அங்கீகரிப்பு)
மாநாடு” 01.09.1991ஆம்
ஆண்டு வேலூரில்
தமிழ்நாடு இளைஞர்
பேரவை நடத்தியது. இதனால்
தோழர்கள் பொழிலன், தமிழ்முகிலன்,
பவணந்தி உள்ளிட்ட 73 பேர்கள்
ஐயா உடன் தளைப்படுத்தப் பட்டனர்.
தமிழர் பாதுகாப்பு மாநாடு எனும்
தலைப்பில் 08.09.1991ஆம்
ஆண்டு நடைபெற்ற மாநாட்டில்
தமிழீழத்திற்கு ஆதரவாகவும்
கொடியவன் இராசீவைக் கொன்ற ஈழ
மரத்தி தனுவை பாராட்டி பேசியதன்
காரணமாக 24.09.91ல்
தளை செய்யப்பெற்று 15 நாள்
கழித்து பிணையலில்
விடுதலையானர். தமிழீழ ஆதரவுக்
குரல்களுக்கு இந்திய
அரசு தடைவிதித்தது. விடுதலைப்
புலிகள் இயக்கமும்
தடை செய்யப்பட்டது. ஐயா அவர்கள்
தொடர்ந்து தமிழீழ விடுதலைப்
போராட்டத்தை ஆதரித்து எழுதியும்
பேசியும் வந்தார்கள்.
”அதோ என் தமிழரை சிங்களர்
கொல்வார்!
ஆடும் என் சதை நரம்பு எல்லாம்!
அடடா! உலகம் கேட்டிடும்
பார்த்திடும்!
ஆயினும் அதன்மனம் கல்லாம்!
இதோ, நான் ஒருவன் இங்கிருக்
கின்றேன்!
எனைச் சிறைசெய்யினும் செய்க!
ஈழத் தமிழரை ஆதரிக் கின்றேன்!
என்தலை! கொய்யினும் கொய்க!”
தமிழ்நாடு விடுதலைக்
கோரிக்கைக்காக
தொடர்ந்து செயல்பட்டதால்
27.01.1993ஆம் ஆண்டு ”தடா”
சட்டத்தின் மூலம் பாவலரேறு,
பழ.நெடுமாறன், பொழிலன்
ஆகியோர் சிறையில்
அடைக்கப்பட்டனர் 7 மாதம்
கழித்து ஐயா விடுதலை செய்யப்பட்டா
அருப்புக்கோட்டையில்
22.04.1995ஆம்
ஆண்டு தமிழ்நாடு மார்க்சிய
லெனினிய கட்சியின்
பொதுச்செயலாளர் கார்முகிலின்
திருமணத்தை நடத்தி வைத்தார்.
தொடர்ந்து உறுதியாக
இந்தியத்தை எதிர்த்தார் ஈழ
விடுதலைக்கும் விடுதலைப்
புலிகளுக்கும் வலிமையாக குரல்
எழுப்பி வந்தார் ஆட்சியாளர்களின்
அடக்கு முறைக்கு அடிபணியாத நம்
தமிழ்த்தேசியத்தந்தை கொடும்
துன்புறுத்தல்களுக்கு உள்ளாகி மன
வலிமை குன்றாத
பாவலரேறு அய்யா அவர்களின் உடல்
நலிவுற்றது
தமிழே பயிற்று மொழி,
ஆட்சிமொழி என
வலியுறுத்தி 24.04.1995ஆம் ஆண்டு
தலைநகர் தமிழ்க் கழகம் நடத்திய
பேரணியில்
கலந்து கொண்டு சிறைபடுத்தப்
பட்டார். இதுவே ஐயா அவர்கள்
ஈடுபட்ட இறுதிப் போராட்டம். 1995
மார்ச் திங்களில் உடுமலைப்பேட்டை,
ஈழத்தமிழர் ஆதரவு மாநாட்டில்
பங்கேற்கப் புறப்பட்ட
ஐயா உடல்நலக்குறைவு காரணமாகச்
சென்னை திரும்பினார்.
தொடர்ந்து காய்ச்சலில் துன்புற்ற
நிலையிலும், தமிழே பயிற்றுமொழி,
ஆட்சிமொழி என்பதை வலியுறுத்தித்
தலைநகர்த் தமிழ்க்கழகம் நடத்திய
பேரணியில்
குடும்பத்தோடு பாவலரேறு ஐயா அ
கலந்துகொண்டு தளைப்பட்டார்கள்.
ஐயா அவர்கள் பங்கேற்ற இறுதிப்
போராட்டம் இதுவே.
பின்னர் 7-6-95 இல்
இராமச்சந்திரா மருத்துவமனையில்
உடலநலக் குறைவு காரணமாக
மருத்துவச்
சிகிச்சைக்கு அனுமதிப்பட்டிருந்த
ஐயா அவர்களின் குருதி அழுத்தம்
குறைந்து சிறுநீரகம் செயலிழந்த
காரணத்தால் 11-6-1995 ஞாயிற்றுக்
கிழமை காலை 7 மணியளவில்
தமிழ்த்தேசியத்த
ந்தை பாவலரேறு அவர்கள்
இயற்கை எய்தினார்கள்.
உலகத் தமிழர்களின் உரிமைக்குரல்
தமிழ்த்தேசியத்தின் செயல் வீரம்
ஒப்பற்ற விடுதலைப்போராளி
அவர்களின் விடுதலை வேட்கையின்
எழுத்தும் உரையும்
நின்று விட்டதா! ..
அவர் உயிர்த்துச்சென்ற
விடுதலை உணர்வும் பதித்துச்
சென்ற விடுதலைத் தடங்களும்
விரிந்து கிடக்கிறது தமிழ்தேசியமக்கள்
விடுதலை நோக்கி தீரமாய் பயணிக்க..
”எதுவரை எம்மூச்சு இயங்கு கின்றத
எதுவரை எம்உடல் இம்மண்
தோயுமோ-
எதுவரை எம்மனம்
நினைவலை எழுப்புமோ
அதுவரை மொழிஇன
ஆர்ப்படங்காது!”
” 16-6-1995 தமிழ்த்தேசியத்த
ந்தை பாவலரேறு பெருஞ்சித்திரனார்
அவர்களின் இறுதி ஊர்வலத்தில்
ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட
உலகத் தமிழ் உணர்வாளர்கள்
கலந்துகொண்டு தமித்தேசிய
விடியலுக்கான வாழ்நாள்
போராளிக்கு வீர வணக்கம்
செலுத்தினார்கள்.***

Leave a comment